Monday, May 24, 2010

உயிர்

ஒரு உயிர் துடிக்கும் பொழுது,
யாரும் கவனிக்காமல் இருப்பார்கள்,
ஆனால் நின்ற பின் எல்லாரும் துடிப்பார்கள்.
இது தான் life.

நட்பு

அன்பு" யார் மீதும்
காட்டலாம் ஆனால் "கோபம்" உயிருக்கு மேலான உரிமை உள்ளவர்கள் மீது மட்டுமே காட்ட முடியும்.

Monday, May 10, 2010

மதியின் கவிதைகள்

காதல் செய்வது அவ்வளவு சுலபமா ?


காதல் செய்யும் தோழர்களே ..கவனித்து கொள்ளுங்கள்
இருமனம் ஒன்று சேர்ந்து இதயங்களை இடம் மாற்றி கொள்ளும்
அற்புதம் வாய்ந்தது காதல் ...
காதல் உதித்த பின் இருமனங்களும் ஒன்று சேர்ந்து
திருமணத்தில் முடியுமா என்பது சந்தேகமே ...
காரணம் காதலிப்பதில் இருக்கும் வேகம்
கல்யாணம் பண்ணுவதில் இருக்காது ...
காதலிப்பதற்கு தகுதி தேவையில்லை ஆனால்
கல்யாணத்திற்கு கட்டாயம் தேவை ...
காதல் பூப்பது நொடியில் என்றாலும்
அதன் விளைவுகள் வருடக்கணக்கில் ...
உணர்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியம் கொடுக்கும்
உணர்வுகள் இழப்பின் தருவது வலியை மட்டுமே ..
காதலினால் வாழ்ந்தவன் சில கோடி
வீழ்ந்தவன் பல கோடி ...
மோகத்தில் பூப்பது தான் பலரின் காதல்
முடிந்தவுடன் சென்றுவிடும் .. விளைவு
மூச்சை கூட நிறுத்த தோன்றும் ..
அழகில் உருவாகும் அனைவரின் காதல்
இன்னொரு அழகை காணும் வரை தான் ..
எவ்வளவு காதலிக்கிறோம் அல்லது
காதலிக்க படுகிறோம் என்பது முக்கியம் அல்ல ..
எதனால் காதலிக்க படுகிறோம் என்ற ஒரு கேள்வியே
போதும் எம் காதலின் நிலையை சொல்ல ...
காதல் உண்மையானது ...உயிர் உள்ள உணர்வு
ஆனால் உருவமில்லாதது ...
என்னருமை தோழர்களே , தோழிகளே
காதல் ஒன்றும் தவறே இல்லை ...
காதலிக்க படாமல் இங்கு யாரும் இல்லை ..
காதல் கானல் நீராக போக கூடாது ..
அது சேர்வதும் பிரிவதும் உங்கள் மனதில் ...
எல்லா காதலும் ஒன்று சேர வேண்டுமெனில் ..
உங்களின் நிலையை நீங்களே அறிந்து கொள்ளுங்கள் ..
உங்களுக்கான தகுதியை உருவாக்கிய பின்
காதலியுங்கள் ....
காதல் என்பது இரு பாகம் ...முதலாவது இனிக்கும்
எப்போதுமே .... இரண்டாம் பாகம்
கசக்கும் (கல்யாணம்) ..
காதலித்தவர்கள் கல்யாணத்தின் பின்னும்
காதலிக்க பட வேண்டுமானால்
தகுதியை உருவாக்கி கொண்டு காதலியுங்கள் ..
அதன் பின் நீங்கள் காதலிகாவிடினும்
மற்றவர்களால் காதலிக்க படுவீகள் ...

Sunday, May 9, 2010

சிந்தி



உன்னை சிரிக்க வைக்கும் இதயத்தை நம்பாதே
உன்னை சிந்திக்க வைக்கும் இதயத்தை நம்பு
உனது வாழ்கை என்றும் ஒளிமயமாய் இருக்கும்...!

வாழ்கை



விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று .....
வாழ்க்கையும் அப்படி தான்...........
முடியும் வரை தெரிவதில்லை.......
வாழ்வது எப்படி என்று.

Saturday, May 8, 2010


நேசிக்கும் உறவுகள் பிரிந்து சென்றாலும்...........
நேசித்து நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்....
அது தான் life ..!

Friday, May 7, 2010

நீ

ஒரு பொண்ணு அழக இருப்பதால் அவளை நீ நேசிக்கவில்லை

நீ நேசிப்பதால் தான் அவள் அழகாக தெரிகிறாள்..!!

இதயம்

உன்னை நான் என் கண்களில் வைக்கவில்லை, என் இதயத்தில் வைத்து இருக்கிறேன்.

ஆனால் நீயோ, இதயத்தில் இருந்துகொண்டு கண்களில் கண்ணீரை வர வைகிறாய் !

Thursday, May 6, 2010

Wednesday, May 5, 2010

நட்பா? காதலா?
நட்பா? காதலா?

நட்பு பெறிதா? காதல் பெறிதா?
நண்பன் கேட்டான்

நான் முதலில் கற்றுக் கொண்டது
நட்பு தான்

நான் இது வரையில் காத்து வருவது
நட்பு தான்

என்னை நானாக பார்த்தது
நட்பு தான்

காதலின் இனிமையான பாகம்
நட்பு தான்

எனினும்
எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது
காதல் தான்
எனவே,
நட்பின் காதலும்,
காதலின் நட்பும்.

சிந்தனை

கனவுகளை காப்பாற்ற
கனவுகளே காணத் தெரியாமல்
இருந்த காலமுமுண்டு.
ஆசை துகள்களாக ஆரம்பித்து
கனவுகளாக உருவெடுத்தது.
கனவுகள் காலப் போக்கில்
லட்சியங்களாக மாறிக்கொண்டது.
வாழ்க்கைப் பாதையில் சேர்ந்தபின்
லட்சியங்கள் வடிவம் பூசப்பட்டது.
.
.
.
பல இன்பங்களை விட்டுக்கொடுத்து
எண்ணங்களை மாற்றியமைத்து
உடலை காயப்படுத்தி
உணர்வுகளை ஒருமுகப்படுத்தி
சொந்தங்களை தூறத்தல்லி
நம்பிக்கையை தன்வசப்படுத்தி

என் சிந்தனைக்கு மட்டும் மதிப்பளித்து
வளர்ந்த பாதைக்கு முற்றுப்புள்ளியிட்டு
.
.
.
மீண்டும் விதையாகி, வேருன்றி,
கிலையிடத் துவங்கிவிட்டேன்...