Saturday, March 19, 2011

பெண்

ஆணோ - பெண்ணோ
சமர்க்களமோ, சமையற்களமோ
பங்களிக்க இரண்டும்
சமமான களமே.பெண்
அடிமையும் இல்லை
எஜமானும் இல்லை
சக உயிர் என்பதே சரி.

மனிதன்

அன்போடு சிரிப்பவன் நண்பன்!

எப்பொழுதும் சிரிப்பவன் கோமாளி!

காணாமல் சிரிப்பவன் கஞ்சன்!

கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்!

கோபத்தில் சிரிப்பவன் கொலையாளி!

மோகத்தில் சிரிப்பவன் வெறியன்!

நீதியோடு சிரிப்பவன் அறிஞன்!

நிலைமறந்து சிரிப்பவன் காதலன்!

நின்று சிரிப்பவன் நிலையுள்ளன்!

மகிமையில் சிரிப்பவன் சமர்த்தன்!

குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி!

கொடுமையில் சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்!

துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்!

Tuesday, March 8, 2011

பிரிவி

எனக்குள் ஒரு வசந்தம் உன் வரவு !

எனக்குள் ஒரு மாற்றம் உன் நினைவு..!

எனக்குள் ஒரு இன்பம் உன் உறவு..!

எனக்குள் ஒரு துன்பம் உன் பிரிவி..!

பெண்

ஒரு பெண்ணால்..
ஒரு வீடு மட்டும் அல்ல
ஒரு நாடே..
சிறக்கலாம்
அந்த பெண் நீயாகவும் இருக்கலாம்
நானகவும் இருக்கலாம் ...........

Tuesday, March 1, 2011

நட்பு

புரியாத பிரியம்
பிரியும் போது புரியும்

உண்மையற்ற நட்பு..

உயிர் உள்ள உறவு என்று உறவாடினேன்!!!....

உள்ளத்தை காயப்படுத்தி.......

உறவை பிரித்து எடுத்து செல்லும் வேளையில்.....!

உயிர் வாடினேன்.......

வெற்றி

வெற்றியால் மகிழ்ச்சி மட்டும் தான் கிடைக்கும்..
ஆனால் தோல்வியால் நல்ல அனுபவமும்
அதனால் பக்குவமும் கிடைக்கும் ....
அனுபவம்தான் வாழ்கையில் வெற்றி பெற உதவும்..........

காதல்

அவனை முதல் முதல் சந்தித்த போது அவனின் அமைதியான முகமும் எழிமையான தோற்றமும் என்னை கவர்ந்தது அவனில் நான் காதல் வயப்பட்டேன் ....