Wednesday, August 4, 2010

முடியுமா

எத்தனையே செய்து விட்டோம்...
எவற்றை எல்லாமோ இழந்திருக்கிறோம் ...
இருந்தும் வாழ்கிறோம் ..
நினைத்து பாருங்கள்..
இழந்ததை பெற ? இனிமேல் முடியாது ..
இன்று முதல் ..
இழந்ததை புறந்தள்ளுவோம்..
வளமான வாழ்வமைய ...
நடப்பதை நன்றாகுவோம் ...
நாளையை கூட நமக்காய் மாற்றுவோம்

நம்

மரணத்தை நோக்கி நகரும் நம் வாழ்வில் மகிழ்வின் அடையாளங்களாய் இருப்பது காதலும் நல்ல நட்புகளும் தான் .. அன்பான நட்பை நேசிப்போம் அழகான காதலை சுவாசிப்போம்

அம்மா

என் முதல் அழுகைக்கும் சிரிப்புக்கும் காரணமாக இருந்தவள் ...
என்னை இவ்வுலகத்துக்கு அறிமுக படுத்தியவள் .
அவள் உதிரத்தையே எனக்கு உணவாக்கியவள்...
நான் வளர்ந்த பின்னும் என் கண்ணாய் இருந்தவள் ..
எவ்வளவு வளர்ந்தாலும் என்னை குழந்தை என்பவள்.
என்னை மட்டுமே உலகமாக கொண்டவள்...
அவள் தான் என் அம்மா

காரணம்

எது நடந்ததோ அதுக்கு காரணம் நாம் தான் ..எது நடக்க இருக்கிறதோ அதுக்கு காரணம் நாம் தான் ..எதை தொலைத்தோமோ அதுக்கு காரணம் நாம் தான் ..எதை இழக்க இருக்கிறோமா அதுக்கும் காரணம் நாம் தான் ..எம்மை சுற்றி எமக்கு ஏதாவது நடக்க ஒட்டுமொத்த காரணமும் நாம் தான்

சுவாசம்

நீ என்னவாக
ஆசை படுகிறாய்
என்று என்னிடம் கேட்டால்
நான் உன் சுவாசமாக
ஆசை படுவேன்!
ஏன் தெரியுமா?
நீ என்னை மறந்தாலும்
சுவாசிக்க மறக்கமாட்டாய்
அல்லவா அதற்காக தான்

நேசித்தால் மட்டும் போதும்

இவ் உலகில் யாரையும் எல்லை
மீறி நேசித்து விடாதே....
நீ எதிர் பார்த்த அன்பு உனக்கு கிடைக்காவிட்டால்
அது போல் ஒரு துன்பத்தை நீ கடந்துருக்க மாட்டாய்...
நேசித்தால் மட்டும் போதும்
வேறு எதையும் எதிர் பார்த்து விடாதே,
மிஞ்சுவது உனக்கு சோகம் மட்டுமே.....

அன்பு

"""எப்போதெல்லாம் உன் உள்ளம் வலிக்கிறதோ அப்போதெல்லாம் உன்னை நேசிக்கும் உள்ளதிடம் பேசி பார்"""
அவர்களின் அன்பு உன்னை சந்தொசபடுத்தும்""""...........

Tuesday, August 3, 2010

பிரிவு

உன் பிரிவு தரும் வலியை விட
நீ பிரிந்து பின் உன் நினைவால் ஏற்படும் வலிதான் அதிகம்
உன் பிரிவு என்னை ஒருமுறை கொன்றது
உன் நினைவுகளோ என்னை தினந்தோறும் கொள்கிறது.

கடினம்

வாழ்க்கை புரிவது கடினம்
புரிந்தால் வாழ்வது கடினம்.

இதயம்

" என் இதயம் என்னிடம் இருந்து கொண்டு

எப்போதும் உன்னையே நினைகேறது."

காதல்

" காதல் என்பது காற்று போல்
அதை சுவாசிக்க கற்று கொள்"